×

வேலூர் சிறைகளில் டிஐஜி அரையாண்டு ஆய்வு

வேலூர், பிப்.26: வேலூரில் ஆண்கள் மத்திய சிறை, பெண்கள் தனிச்சிறை உள்ளன. சிறைகளில் ஆண்டுக்கு 2 முறை டிஐஜி ஆய்வு செய்ய வேண்டும். அதன்படி, வேலூர் சரக சிறைத்துறை டிஐஜி ெஜயபாரதி, நேற்று முன்தினம் வேலூர் மத்திய சிறை, பெண்கள் தனிசிறையில் அரையாண்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து 2வது நாளான நேற்று பெண்கள் சிறை அருகே உள்ள கவாத்து மைதானத்தில் காவலர்களின் அணிவகுப்பு, சீருடை பொருட்களை ஆய்வு செய்து சிறை காவலர்களின் நிறை, குறைகளை டிஐஜி ஜெயபாரதி கேட்டறிந்தார்.

Tags : Vellore Jails ,
× RELATED பொய்கை மாட்டுச்சந்தையில் கலெக்டர்...