×

வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில் 27,28ல் தி.மு.க. உட்கட்சி தேர்தல்

திருப்பூர், பிப். 26: திருப்பூர் வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில் தி.மு.க. உட்கட்சி தேர்தல் வரும் 27, 28ம் தேதிகளில் நடத்தப்பட உள்ளது.இது குறித்து திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் செல்வராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை கூறியிருப்பதாவது:தி.மு.க.வின் 15வது பொது தேர்தல் பிப்ரவரி 21ம் தேதி முதல் மார்ச் 15ம் தேதி வரை நடைபெறும் என்று தலைமை கழகம் அறிவித்துள்ளது. இதன்படி திருப்பூர் மாவட்டத்தின் தலைமை கழக பிரதிநிதியாக உள்ள அந்தநல்லூர் துரைராஜ் தலைமையில், திருப்பூர் வடக்கு மாவட்ட தேர்தல் மேற்பார்வையாளர் திருமூர்த்தி, சுப்பையன், மேங்கோ பழனிசாமி, தங்கராஜ் ஆகியோர் முன்னிலையில், அன்னூர் ஒன்றியத்துக்கு வருகிற 27ம் தேதி சரவணா லாட்ஜிலும்,

அவிநாசி ஒன்றியத்துக்கு கோவை மெயின்ரோடு நவகிரீன் மஹாலிலும், பொங்கலூர் ஒன்றியத்துக்கு 27ம் தேதி கொடுவாய் வி.எஸ்.எஸ். மண்டபத்திலும், 28ம் தேதி பொங்கலூர் லட்சுமி மண்டபத்திலும், திருப்பூர் ஒன்றியத்துக்கு 27ம் தேதி பெருமாநல்லூர் பி.வி.மஹாலிலும், பல்லடம் ஒன்றியத்துக்கு பல்லடம் ஒன்றிய அலுவலகத்திலும், திருமுருகன் பூண்டி ஒன்றியத்துக்கு 27 மற்றும் 28ம் தேதி ஆகிய இரு நாட்கள் அவிநாசி கோவம்சா திருமண மண்டபத்திலும், சேயூர் ஒன்றியத்துக்கு 27 மற்றும் 28ம் தேதி ஆகிய இரு நாட்கள் காமராஜபுரம் முறியாண்டம்பாளையம் ரோடு மணியநாயக்கர்மில்லிலும் கிளைக் கழக பொறுப்புகளுக்கான வேட்பு மனுக்கள் பெறப்படும். அவைத் தலைவர், செயலாளர், துணைச்செயலாளர், பொருளாளர், மேலமைப்பு பிரதிநிதி ஆகியோர்களுக்கு ரூ.100-ம், செயற்குழு உறுப்பினருக்கு ரூ.20 (ஒரு வேட்புமனுவுக்கு மட்டும்) செலுத்த வேண்டும். கிளைக்கழகச் செயற்குழு பொறுப்பிற்கு, தேர்ந்தெடுக்கப்பட்ட ஐவர் உள்ளிட்ட 21 பேருக்கு மிகாமல் இருக்க வேண்டும். 100 உறுப்பினர்களுக்கு மேற்படாத கிளை ஒரு பிரதிநிதியையும், 100க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்ட கிளை இரு பிரதிநிதிகளையும் தேர்ந்தெடுக்க வேண்டும். இதில் ஒருவர் கண்டிப்பாக பெண்ணாக இருக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : district ,Panchayats ,DMK ,elections ,
× RELATED ஜனாதிபதியை அவமதிக்கும் ஒரே கட்சி பாஜ-அந்தியூர் செல்வராஜ் எம்.பி. பேச்சு