×

சி.ஏ.ஏ.வுக்கு எதிராக 11ம் நாளாக தொடரும் தர்ணா போராட்டம்

திருப்பூர்,  பிப்.26: திருப்பூர் மாநகரில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக 11ம் நாளாக  பல்வேறு முஸ்லிம் அமைப்பினர் ஒன்றினணந்து தொடர் தர்ணா போராட்டத்தில்  ஈடுபட்டு வருகின்றனர்.குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக  கடந்த 14ம் தேதி சென்னை வண்ணாரப்பேட்டையில் போராட்டம் நடத்திய முஸ்லிம்  பெண்கள் மற்றும் இளைஞர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து  தமிழகம் முழுவதும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் ஆர்ப்பாட்டம், மறியல்  உள்ளிட்ட தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 அந்த வகையில் திருப்பூர் அறிவொளி ரோட்டில் கடந்த 15ம் தேதி காலை முதல் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய  தர்ணா போராட்டம் 11ம் நாளாக நேற்று தொடர்ந்து நடைபெற்றது. இதில்  குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை  தாக்கிய போலீஸ் அதிகாரி ஏ.சி. தினகரனை பதவி நீக்கம் செய்ய வேண்டும்,  குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம்  நிறைவேற்ற வேண்டும், மத்திய அரசும் குடியுரிமை திருத்த சட்டத்தை கைவிட  வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டத்தை கைவிட  மாட்டோம் என அறிவித்து 300 பேருக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு  வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு  போடப்பட்டுள்ளது.

Tags : dharna fight ,CAA ,
× RELATED சிஏஏ சட்டத்தை ரத்து செய்வோம் மோடியை...