×

ஓசூர் மாநகர திமுக செயற்குழு கூட்டம்

ஓசூர்,பிப்.26: ஓசூரில், மாநகர திமுக செயற்குழு கூட்டம் நடந்தது.இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாடுவது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. ஓசூரில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, ஓசூர் மாநகர திமுக செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகர அவைத் தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். மாநகர பொறுப்பாளர் சத்யா எம்எல்ஏ அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ, வேப்பனப்பள்ளி எம்எல்ஏ முருகன் ஆகியோர் கலந்துகொண்டு கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து பேசினர்.  கூட்டத்தில் நகர பொருளாளர் சென்னீரப்பா, துணை செயலாளர்கள் திம்மராஜ், நாகராஜ், சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து வருகிற மார்ச் 1ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை இளைஞர் எழுச்சி நாள் விழாவாக கொண்டாட வேண்டும். மேலும் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது, வருகிற மாநகராட்சி உள்ளாட்சி தேர்தலில் தலைமை அறிவிக்கும் வேட்பாளர்களை வெற்றி பெற வைப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  கூட்டத்தில் மேற்கு மாவட்ட அவை தலைவர் யுவராஜ், தலைமை செயற்குழு உறுபினர் சுகுமாறன், முன்னாள் நகர செயலாளர்கள் அக்ரோநாகராஜ், குருசாமி, நடேசன், அணிகளின் அமைப்பாளர்கள் சீனிவாசன், எல்லோரமணி, சேகர், கோபாலகிருஷ்ணன், ஞானசேகரன், முன்னாள் பேரூர் செயலாளர் ரவிகுமார், கிளை செயலாளர்கள் முனிகிருஷ்ணன், சேகர், ராஜராம், மீசை கிருஷ்ணன், மகளிரணி முனிரத்னா, சுனந்தா, தனலட்சுமி, சந்திரலேகா, அமராவதி, துணை அமைப்பாளர் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.செந்தில்குமார் நன்றி கூறினார்.

Tags : Hosur Municipal Corporation ,Executive Committee Meeting ,
× RELATED 21 நாள் முடக்கத்தை திட்டமிடாமல்...