×

மாவட்டம் முழுவதும் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி, பிப்.26: கிருஷ்ணகிரியில் கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் எதிரில், மாவட்ட தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத் தலைவர் சலீம்பாஷா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் கோரிக்கை குறித்து பேசினார். இதில் அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சந்திரன், கிராம ஊழியர் சங்க மாவட்ட தலைவர் லட்சுமணன், அரசு ஊழியர் சங்க மகளிர் அமைப்பாளர் ஜெகதாம்பாள், அரசு வருவாய்த்துறை ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் பிரதாப், வட்டக் கிளை தலைவர் வெங்கடேசன் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர். வட்ட துணைத் தலைவர் சீனிவாசன் நன்றி கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, கடலூர் வருவாய்த்துறை அலுவலர்கள் மீது கடலூர் மாவட்ட கலெக்டர் எடுத்து வரும் ஊழியர் விரோத மற்றும் பழிவாங்கும் நடவடிக்கைகளை ரத்து செய்திட வேண்டும். நடைமுறைகளை தொடர்ந்து மீறிவரும் கடலூர் மாவட்ட கலெக்டர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவகங்கை மாவட்ட இளநிலை ஆய்வாளர் பாரதிதாசன் என்பவரது இடைக்கால பணிநீக்கத்தை ரத்து செய்து ஆணையிட வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள 81 ஆதிதிராவிடர் நலம் தனி வட்டாட்சியர் பணியிடங்களை கலைப்பதற்கான நடவடிக்கையினை ஆதிதிராவிடர் நலத்துறை எடுத்து வருவதை உடனடியாக கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை தாலுகா அலுவலகம் முன் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் நேற்று பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு வருவாய் அலுவலர் சங்க வட்ட கிளை தலைவர் ரவி தலைமை தாங்கினார். வட்ட கிளை செயலாளர் பிரபாகர் கோரிக்கையை விளக்கி பேசினார். தாசில்தார் சரவணன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கவட்ட தலைவர் அன்பழகன், மாவட்ட செயலாளர் நடராசன் ஆகியோர் பேசினர். துணை தாசில்தார் ரமேஷ் நன்றி கூறினார்.

Tags : District Revenue Officers' Association ,
× RELATED புதுக்கோட்டை மாவட்டத்தில்...