×

தாவரவியல் பூங்காவில் செல்பி ஸ்பாட்

ஊட்டி, பிப். 26:  ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.மேலும், கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக பூங்காவில் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு, அதில் மலர்கள் பூத்துக் குலுங்கும். அதேபோல், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொட்டிகளில் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு அந்த தொட்டிகள் மாடங்களிலும், புல் மைதானங்களிலும் அலங்கரித்து வைக்கப்படும். இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது வழக்கம் உள்ளது.

இந்நிலையில், கோடை சீசனுக்காக தற்போது பூங்காவை தயார் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பூங்காவில் உள்ள பாத்திகளில் நாற்று நடவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தொட்டிகளிலும் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது. இதனால், பூங்கா மலர்கள் இன்றி காட்சியளிக்கிறது. கண்ணாடி மாளிகையில் மட்டுமே மலர்கள் உள்ளன. தற்போது பூங்காவில் மலர்கள் இல்லாத நிலையில், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், பூங்கா அலுவலகம், புல்மைதானம் போன்ற பகுதிகளில் அலங்கார செடிகளை கொண்டு செல்பி ஸ்பாட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் அருகே சுற்றுலா பயணிகள் போட்டோக்கள் எடுத்து மகிழ்கின்றனர்.



Tags : Botanical Garden ,
× RELATED 100 சதவீத வாக்குப்பதிவு குறித்து ஊட்டி...