×

கடலூர் கலெக்டரை கண்டித்து வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு, பிப். 26: செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. சங்க தலைவர் சுகுமாரன் தலைமை வகித்தார். துணை தலைவர் ஓம்பிரகாஷ்  முன்னிலை வகித்தார்.
இதில், கடலூர் வருவாய்த்துறை அலுவலகர்கள் மீது கடலூர் கலெக்டர் எடுத்துவரும் ஊழியர் விரோத மற்றும் பழிவாங்கும் நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும். கடலூர் கலெக்டர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வருவாய் துறையில் முதுநிலை வருவாய் ஆய்வாளர் நிலையில், பணி முதுநிலை தொடர்பாக நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஆணைகளை விரைவாக வழங்க வேண்டும். சிவகங்கை மாவட்ட இளநிலை வருவாய் ஆய்வாளர் பாரதிதாசனின் இடைக்கால பணி நீக்கத்தை ரத்து செய்ய ஆணையிட வேண்டும்.

வருவாய் துறை அலுவலர்களின் நீண்டநாள் கோரிக்கைகள் விரைவில் தீர்வு காண வருவாய்த் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். தமிழக அரசு ஊழியர்கள் சம்பளம் பெறுவதில் பெரும் சிக்கலாக விளங்கக்கூடிய ஐஎப்எச் ஆர்எம்எஸ் திட்டத்தில் உள்ள பல்வேறு நடைமுறை சிரமங்களை கருவூலம் மற்றும் கணக்கு துறை ஆணையர் போக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். மாவட்ட நிர்வாகிகள் வெங்கட்ரமணன், தேவன், தியாகு, சார்லஸ், சுரேஷ், உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், மாவட்ட துணை தலைவர் ஏழுமலை நன்றி கூறினார்.

Tags : protest ,collector ,Revenue Officers Association ,Cuddalore ,
× RELATED கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை...