×

வெயில் கொடுமை பீர் விற்பனை அதிகரிப்பு

கோவை, பிப்.26:   கோவை கலால் மண்டலத்தில் உள்ள கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டத்தில்  998 டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்படுகிறது. டாஸ்மாக் கடைகளில் தினமும் சுமார் 25 ஆயிரம் பெட்டி பீர் பாட்டில் விற்பனையாகி வந்தது.
மொத்த மதுபான விற்பனையில் பீர் பாட்டில் 3 முதல் 5 சதவீதம் அளவிற்கே இருந்தது. கடந்த சில நாட்களாக வெயில் தாக்கம் அதிகரித்து வருவதால் டாஸ்மாக்கில் பீர் பாட்டில் விற்பனை அதிகரித்துவிட்டது. கலால் மண்டல அளவில் தினமும் 40 ஆயிரம் பெட்டி பீர் பாட்டில் விற்பனையாகி வருகிறது. வரும்  மார்ச், ஏப்ரல், மே மாதத்தில் பீர் பாட்டில் விற்பனை 200 முதல் 300 சதவீதத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. பீர் விற்பனை அதிகரித்த போதிலும், இந்திய தயாரிப்பு அந்நிய மதுபானங்களின் விற்பனை அளவு குறையவில்லை. கோவை மாவட்டத்தில் தினமும் சுமார் 3 கோடி ரூபாய் மதுபானம் விற்கப்படுகிறது. கலால் மண்டல அளவில் தினமும் 10 கோடி ரூபாய்க்கு மதுபாட்டில் விற்பனையாகிறது. வெயில் தாக்கம் அதிகமானால் பீர் விற்பனையும், பிராந்தி பாட்டில் விற்பனையும் கூடுதலாகி விடும். விற்பனை சதவீதம் சரியாது என டாஸ்மாக் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Tags :
× RELATED 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு