×

நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட 14 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

ஊட்டி, பிப். 26: நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, பயன்படுத்தியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர், நெல்லியாளம் நகராட்சிகள், 11 பேரூராட்சிகள் மற்றும் 4 ஊராட்சி ஒன்றியங்கள் அடங்கிய 4 மண்டலங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தவிர்ப்பது பொது இடங்களில் குப்பைகள் கொட்டுவதை தவிர்க்க மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த கள ஆய்வு முடிவு செய்யப்பட்டது. மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சாலையோர கடைகளில் தடை செய்யப்பட்ட குடிநீர் பாட்டில்கள் மற்றும் குளிர்பான பாட்டில்கள் விற்பனை செய்வதை தவிர்ப்பது தொடர்பான விழிப்புணர்வினை வியாபாரிகள், பொதுமக்கள் மற்றம் சுற்றுலா பயணிகள் மத்தியில் ஏற்படுத்தும் பொருட்டு ஒட்டு மொத்த கள ஆய்வு மண்டல அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டது.இதற்காக ஊட்டி, குன்னூர், கூடலூர் மற்றும் கோத்தகிரி ஆகிய 4 மண்டலங்கில் நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் துணை ஆட்சியர்நிலை அலுவலர்கள் குழுக்களா பிரிந்து மாவட்டம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது, தடை செய்யப்பட்ட 14 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதற்காக அபராத தொகையாக ரூ.56 ஆயிரத்து 200 வசூல் செய்யப்பட்டது. வரும் காலங்களில் வியாபாரிகளும், பொதுமக்களும், சுற்றுலா மற்றும் வெளியூர் பயணிகளும் தடை செய்யப்பட்ட குடிநீர் பாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துதல் பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தவிர்க்க வேண்டும். சுற்றுலா பயணிகள் நலனுக்காக நிறுவப்பட்டுள்ள குடிநீர் வழங்கும் இயந்திரத்தை பயன்படுத்தி நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாத்திட வேண்டும் என கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கேட்டுக் கொண்டுள்ளனர்.

Tags : Nilgiris ,
× RELATED வார விடுமுறை நாளில் களைகட்டிய சுற்றுலா தலங்கள்