×

பெருந்துறை எம்.எல்.ஏ. தலைமையில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா

பெருந்துறை, பிப். 26:  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பெருந்துறை தொகுதி அ.தி.மு.க. சார்பில் நேற்று முன்தினம் கொண்டாடினர். இந்த விழாவையொட்டி, பெருந்துறை நகர், குன்னத்தூர் சாலை பிரிவில், மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த ஜெயலலிதா திருவுருவப் படத்திற்கு, முன்னாள் அமைச்சரும், பெருந்துறை எம்.எல்.ஏ.வுமான தோப்பு வெங்கடாச்சலம் மற்றும் கட்சியினர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை  செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. மேலும் தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. பெருந்துறை தொகுதியில் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க கட்சி கொடியினை ஏற்றி வைத்து, ஜெயலலிதா திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பள்ளி குழந்தைகளுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கினார். தொடர்ந்து மதியம், பெருந்துறை, சோளீஸ்வரன் கோயில் மற்றும் திங்களூரில் பொதுமக்களுக்கு அன்னதான வழங்கும் நிகழ்ச்சியை தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.     இதேபோல் பட்டக்காரன்பாளையம், மணியம்பாளையம், கணக்கம்பாளையம் அரசு பள்ளி குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கினர். பெரிய வீரசங்கிலி, சின்ன வீரசங்கிலி, கைக்கோளபாளையம், வடமலைகவுண்டன்பாளையம், பச்சாக்கவுண்டன்பாளையம், மாச்சாபாளையம், கிரேநகர் பகுதிகளில் அங்கன்வாடி மற்றும் அரசு பள்ளிகளில் குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

 இதில், ஒன்றிய செயலாளர்கள் விஜயன், ரவிசந்திரன், அவைத் தலைவர் சந்திரசேகர், நகர செயலாளர்கள் கே.எம்.பழனிசாமி, கல்யாணசுந்தரம், கமலகண்ணன், பெரியசாமி, சீதப்பன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஏ.வி.பாலகிருஷ்ணன், மாவட்ட இலக்கிய அணித் தலைவர் அருள்ஜோதி செல்வராஜ், பெருந்துறை ஒன்றியக்குழு தலைவர் ஜெ.சாந்தி, ஒன்றிய துணைத் தலைவர் எம்.ஆர்.உமாமகேஷ்வரன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் அப்புசாமி, பார்வதி, ஹேமலதா, பெருந்துறை நில வங்கித் தலைவர் சேனாபதி, பெருந்துறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவர் துரைராஜ், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர்கள் கிருஷ்ணமூர்த்தி, சுப்பிரமணி, ஐயப்பன், அருணசாலம், காசிபில்லாம்பாளையம் சங்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Jayalalithaa ,Perundurai ,Birthday Party ,
× RELATED ஜெயலலிதா சொத்துக்களை நிர்வகிக்கப்...