×

தாமிரபரணியில் அசுத்தம் செய்வதை தடுக்க கோரி பாபநாசம் கோயிலில் இந்து மக்கள் கட்சியினர் உள்ளிருப்பு போராட்டம்

வி.கே.புரம், பிப். 26:  தாமிர
பரணியில் அசுத்தம் செய்வதை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாபநாசம் கோயிலில் இந்து மக்கள் கட்சியினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.   பாபநாசத்தில் உள்ள பிரசித்திபெற்ற உலகம்மை சமேத பாபநாச சுவாமி கோயிலில், இந்து மக்கள் கட்சி சார்பில் உள்ளிருப்பு போராட்டம் நடந்தது. மாவட்ட செயல் தலைவர் முருகானந்தம் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் சக்தி பாண்டியன், கிழக்கு மாவட்டச் செயலாளர் கணேஷ், சேரை ஒன்றியத்  தலைவர் சோடாமணி, வீரவநல்லூர் நகர செயலாளர் நீலகண்டன், நகரத்தலைவர் சங்கர்,  துணைத்தலைவர் மாரியப்பன், கிழக்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார், வீரவநல்லூர் நகர அமைப்பாளர் மணிகண்டன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 கோயிலில் உணவருந்துமிடம், குடிநீர் வசதி செய்துதர வேண்டும். கழிப்பிட வசதி ஏற்படுத்த வேண்டும். பாபநாசத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். தாமிரபரணியில் அசுத்தம் செய்வதை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். தகவலறிந்து வந்த கோயில் நிர்வாக அதிகாரி ஜெகநாதன், வி.கே.புரம் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி சமரசப்படுத்தினர். இதையடுத்து கோரிக்கைகளை கோயில் நிர்வாக அதிகாரியிடம் மனுவாக அளித்து சென்றனர். பின்னர் கோயில் நிர்வாக அதிகாரி ஜெகநாதன் கூறுகையில், ‘‘ஏற்கனவே 10 கழிப்பிட அறைகள் உள்ளன. 3 இடங்களில் குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் அதிகப்படியான கழிப்பிடங்கள், குடிநீர் வசதி, பரிகார பூஜை செய்வதற்கு பழைய பாபநாசம் சாலை அருகே 40 லட்சம் மதிப்பீட்டில் கட்டிடம் கட்டுவதற்கான ஏற்பாடு  நடந்து வருகிறது’’ என்றார்.

Tags : Hindu People's Party ,Papanasam Temple ,
× RELATED சிஏஏவால் இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு...