×

காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதல்வர் அறிவித்தது வரலாற்று சாதனை கடையநல்லூர் பொதுக்கூட்டத்தில் தச்சை கணேசராஜா பேச்சு

கடையநல்லூர், பிப். 26: காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தது வரலாற்று சாதனை என கடையநல்லூரில் நடந்த ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான தச்சை கணேசராஜா பேசினார்.  கடையநல்லூர் நகர அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72வது பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் அதிமுக அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் ஆகியவை மேலக்கடையநல்லூர் தேரடி திடலில் நடந்தது. மாநகர் மாவட்டச் செயலாளரும், மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான  தச்சை கணேசராஜா தலைமை வகித்தார். எம்ஜிஆர் மன்ற நகரச் செயலாளர் முருகன், ஜெ. பேரவை நகரச் செயலாளர் முத்தையா பாண்டி, மகளிர் அணி செயலாளர் கலா சுப்பையா பாண்டியன்,  மாணவர் அணி செயலாளர் செங்கலமுடையார், இளைஞர் அணி நகரச் செயலாளர் பால்பாண்டி, எம்ஜிஆர் மன்ற நகர இணைச் செயலாளர் முத்துகிருஷ்ணன்  முன்னிலை வகித்தனர்.  நகரச் செயலாளர் கிட்டு ராஜா வரவேற்றார். அதிமுக அமைப்புச் செயலாளர் முருகையாபாண்டியன் எம்எல்ஏ, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ஆனைகுட்டி பாண்டியன், ஜெ. பேரவை செயலாளர் ஜெரால்ட்  பேசினர். இதையடுத்து பயனாளிகள் 1200க்கும் மேற்பட்டோருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாநகர் மாவட்டச் செயலாளர் தச்சை கணேசராஜா வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், ஜெயலலிதாவின் கனவுகளை இந்த அரசு நினைவாக்கி வருகிறது. குறிப்பாக அவரது வழியில் பல்வேறு நல்வாழ்வு திட்டங்களை தொடர்ச்சியாக செய்து வருகிறது. அத்துடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விவசாயி என்பதால் விவசாயிகளின் நிலை உணர்ந்து காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாப்பு வேளாண் மண்டலமாக அறிவித்தது வரலாற்று சாதனையாகும்’’ என்றார்.

கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் தேவகி குழந்தைவேல், செங்கோட்டை ஒன்றிய செயலாளர் செல்லப்பன், நகரச் செயலாளர் குட்டியப்பா, பொதுக்குழு உறுப்பினர் அனீஸ், எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் புகழேந்தி, ராசையா, ஜெயமாலன், மாவட்ட வர்த்தக அணி பொருளாளர் மைதீன், மாணவர் அணி துணைச் செயலாளர் கருப்பையா தாஸ், நகர அவைத்தலைவர் ஐவர்குலராஜா, இளைஞர் அணி துணைச் செயலாளர் வெங்கடநடராஜ், மெடிக்கல் சரவணன், அண்ணா தொழிற்சங்க பேரவை நாகூர்மீரான், மாரியப்பன், கோமதிசங்கர், அருள்ராஜ், சிங்காரவேலன்,  முகைதீன் பிச்சை, பொன்னுத்தாய், அழகர்சாமி, அப்துல் ஜப்பார், ரமேஷ், கருப்பையா, பழனிசாமி, அபிராமி, காஜாமைதீன், அமானுல்லா, உதுமான் மைதீன், அருண்குமார், அலெக்ஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். எம்ஜிஆர்  இளைஞர் அணி நகரச் செயலாளர் ராஜேந்திர பிரசாத் நன்றி கூறினார்.


Tags : Chief Minister ,Cauvery Delta Districts ,
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...