×

சிஎஸ்ஐ டயோசீசன் நிர்வாகத்திற்கு தேர்தல் ஓய்வு நீதிபதிகள் குழுவிற்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை, பிப். 26: நெல்லை சிஎஸ்ஐ டயோசீசன் நிர்வாகத்திற்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக ஓய்வு நீதிபதிகளுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லை சிஎஸ்ஐ டயோசீசன் நிர்வாக நிதி பிரச்னை தொடர்பாக ஐகோர்ட் கிளையில் சில மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்களை விசாரித்த தனி நீதிபதி கடந்தாண்டு க. 5ல் தீர்ப்பளித்தார். அதில், நெல்லை சிஎஸ்ஐ டயோசீசன் மற்றும் டிடிடிஏவின் நிர்வாகிகளாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி பால்வசந்தகுமார், ஓய்வு ெபற்ற ஐகோர்ட் நீதிபதி ஜோதிமணி ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்.கடந்த 23.4.2017ல் தேர்வு செய்யப்பட்ட செயற்குழு, பிஷப் மற்றும் தலைவர் உள்ளிட்டோர், இந்த நிர்வாகிகளின் மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதலில் செயல்படுவர். செயற்குழுவினர் நிர்வாகம் தொடர்பான ஆவணங்களை, நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளிடம் 2 வாரத்திற்குள் வழங்க வேண்டும். நிதி தொடர்பான அன்றாட நடவடிக்ைககள், நன்கொடை தொடர்பானவை நீதிபதிகள் குழுவின் மேற்பார்வையில் தான் நடக்க வேண்டும்.டயோசீசனின் நிதி சம்பந்தமான நடவடிக்கைகளுக்கு மட்டுமே, ஓய்வு நீதிபதிகள் நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தக்குழுவினர் ஓராண்டுக்கு செயல்படுவர் என்பது உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்திருந்தார். தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து, நெல்லை டயோசீசன் அறக்கட்டளை மற்றும் நிர்வாகிகள் வேதநாயகம், தேவதாஸ் ஞானராஜ் உள்ளிட்ட பலர் தரப்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் அப்பீல் செய்யப்பட்டது.

 இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், என்.ஆனந்த்வெங்கடேஷ் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:நிர்வாகம் மற்றும் கல்வி நிலையங்கள் உள்ளிட்டவற்றை சிறப்பாக நடத்த வேண்டும் என்பதை கருத்தில் ெகாண்டே தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஏனெனில், ஏற்கனவே தேர்வான டயோசீசன் குழுவின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதத்துடன் முடிகிறது. எனவே, தனி நீதிபதி உத்தரவில் தலையிட விரும்பவில்லை. உத்தரவை எதிர்த்து மனு செய்ய வேண்டியதில்லை. நீதிபதிகளின் நிர்வாகம் தொடர்பாக ஏதேனும் பிரச்னை என்றால் தனி நீதிபதியிடம் மனு ெசய்து பரிகாரம் தேடலாம். புதிதாக தேர்தல் நடத்த இன்னும் 2 மாதங்களே உள்ளது. எனவே, இந்த காலத்திற்குள் புதிதாக தேர்தல் நடத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். புதிய பிஷப் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏப்ரலில் பதவியேற்க வேண்டும். நீதிபதிகள் குழு மாதந்ேதாறும் தனது பணிகள் தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய ேவண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


Tags : Icort Branch ,administration ,judges ,
× RELATED தொழில்நுட்ப கோளாறு சீர்...