×

நெல்லை பேட்டை அரசு ஐடிஐயில் மார்ச் 4ல் தொழில்பழகுநர் பயிற்சி தூத்துக்குடி மாவட்ட மாணவர்கள் பங்கேற்கலாம்

தூத்துக்குடி, பிப்.26: தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக்குறிப்பு: நெல்லை பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ஐடிஐ தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள் மற்றும் 8,10,12ம் வகுப்பு தேர்ச்சியடைந்த மாணவர்களுக்கு மார்ச் 4ம்தேதி காலை 9 மணிக்கு தேசிய தொழிற்பழகுநர் ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பாக நெல்லை மண்டல அளவிலான (தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்கள்) தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடக்கிறது.

ஐடிஐ முடித்தவர்கள், 8,10,12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பங்கேற்க தகுதி படைத்தவர்களாவர். மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த முகாம் மூலம் சுமார் 2500க்கும் மேற்பட்ட தொழிற்பழகுநர் இடங்கள் நிரப்பப்பட உள்ளன.இதில் தேர்வு பெறுபவர்களுக்கு உலகளவில் அங்கீகாரம் பெற்ற தேசிய தொழிற்பழகுநர் சான்று வழங்கப்படும். இச்சான்றானது ஐடிஐ முடித்து தேசிய தொழிற்சான்று பெற்றவரைவிட தேசிய தொழிற்பழகுநர் சான்று பெற்றவர்கள் கூடுதல் முழுத்திறமை பெற்றவர்களாக கருதப்படுவர். பெரிய தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு எளிதாக கிடைக்கும். மேலும் மாதாந்திர உதவித்தொகையாக குறைந்தபட்சம் ரூ.7000 வரை வழங்கப்படுகிறது. எனவே இந்த அரிய வாய்ப்பை தூத்துக்குடி மாவட்ட மாணவ, மாணவிகள் பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பான விவரங்களை ஏஞ்சல் விசய நிர்மலா, உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் (அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகம்), தூத்துக்குடி அவர்களை 0461-2340041 என்ற எண்ணுக்கோ அல்லது 8778333588, 9443972101 என்ற எண்களுக்கோ தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என மண்டல பயிற்சி இணை இயக்குநரான மண்டல தொழிற்பழகுநர் ஆலோசகர் தெரிவித்துள்ளார்.


Tags : ITI ,Tuticorin District ,Paddy Bay ,
× RELATED தூத்துக்குடியில் தேர்தல் விதி மீறுபவர்கள் மீது நடவடிக்கை