×

மெஞ்ஞானபுரம் அருகே காதல் தோல்வியால் பட்டதாரி பெண் தற்கொலை

உடன்குடி, பிப்.26: மெஞ்ஞானபுரம் அருகே காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் பட்டதாரி இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.மெஞ்ஞானபுரம் அருகேயுள்ள கல்விளை அம்பேத்கர் நகரைச் சேர்ந்த முனியசாமி என்ற சாமுவேல் மகள் அனிதா(27) பி.காம் பட்டதாரி. அதேபகுதியை சேர்ந்த இன்ஜினியரிங் முடித்த வாலிபர் ஒருவரை கடந்த 8ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதையறிந்த அனிதாவின் தாய் தேவநேசம், அந்த வாலிபரின் குடும்பத்தாரிடம் மகளின் காதல் விவகாரம் குறித்து பேசி திருமணம் செய்ய சம்மதம் கேட்டுள்ளார். அதற்கு அந்த வாலிபரின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அனிதா மனமுடைந்து காணப்பட்டு வந்த நிலையில் அனிதாவிடம் பேசுவதை அந்த வாலிபர் தவிர்த்து வந்துள்ளார். இந்நிலையில் அனிதா நேற்று முன்தினம் இரவு தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். மகளின் அலறல் சத்தம் கேட்டு உள்ளே சென்ற தாய் தேவநேசம் அனிதாவை மீட்டு திருச்செந்தூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் மெய்ஞானபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Graduate girl ,suicide ,Manganapuram ,
× RELATED இளம்பெண் தற்கொலை