×

கடலூர் கலெக்டருக்கு எதிராக வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், பிப்.26: கடலூர் கலெக்டரின் ஊழியர் விரோத போக்கை கண்டித்து, பெரம்பலூரில் கலெக்டர் அலுவலகம் முன்பு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் பாரதிவளவன் தலைமை வகித்தார். செயலாளர் ஷாஜஹான், பொருளாளர் சிவா ஆகியோர் முன்னிலை வகித்தார். மத்திய செயற்குழு உறுப்பினர் குமரிஆனந்தன், மாவட்ட இணைச் செயலாளர் பிரேமராணி உட்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

இதில் கடலூர் மாவட்டக் கலெக்டரின் ஊழியர் விரோதப் போக்கைக் கண்டிப்பது, மேம்படுத்தப்பட்ட ஊதியம்வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. முன்னதாக மாவட்ட துணைத் தலைவர் சரவணன் வரவேற்றார். முடிவில் பொறுப்பாளர் கபிலன் நன்றி கூறினார்.

Tags : protest ,collector ,Revenue Officers Association ,Cuddalore ,
× RELATED கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை...