×

காரியாபட்டி பேரூராட்சி வணிக வளாக நுழைவுவாயிலில் மூடப்படாமல் கிடக்கும் வாறுகால்

காரியாபட்டி, பிப் 26: காரியாபட்டி பேரூராட்சி வணிக வாளக நுழைவுவாயிலில் உள்ள வாறுகால் மேல் மூடி உடைந்து மூடப்படாமல் உள்ளது. ஆபத்து ஏற்படும் முன் மூடவேண்டும் என வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காரியாபட்டி பேரூராட்சி வணிக வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றது. வளாகத்தின் நுழைவுவாயிலில் உள்ள பிரதான கழிவுநீர் வாறுகால் மூடி உடைந்துவிட்டது. இதனால் உள்ளே வாகனம் செல்ல முடியாமல் சிரமப்பட்டனர். இந்நிலையில் உடைந்த வாறுகால் கட்டப்பட்டு பல மாதங்களாகியும் மூடாமல் திறந்து கிடக்கிறது. இதனால் வணிக வளாகத்திற்கு டூவீலர் மற்றும் நான்கு சக்கரவாகனங்களில் வருவோர் மிகவும் சிரமப்பட வேண்டியுள்ளது. இரவு நேரங்களில் செல்வோர் தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

மேலும் சனிக்கிழமை நடைபெறும் கோழி சந்தைக்கு டூவிலரில் வரும் கிராமத்தினர் தடுமாறி விழுந்துள்ளனர். கடைகளுக்கு சரக்கு கொண்டு வந்து இறக்க மிகவும் சிரமமாக உள்ளது. எனவே வியாபாரிகள், பொது மக்களின் நலன் கருதி இந்த வாறுகாலை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Carpathi ,barracks business hall ,entrance ,
× RELATED மயிலாடுதுறையில் பட்டண பிரவேச...