×

நூல் வெளியீட்டு விழா

ராஜபாளையம், பிப். 26: ராஜபாளையத்தில் சுதந்திர சிந்தனை இலக்கிய அமைப்பு சார்பில் நூல் வெளியீட்டு விழா நடந்தது. ராஜபாளையத்தில்  கடந்த ஐந்து ஆண்டுகளாக சுதந்திர சிந்தனை இலக்கிய அமைப்பு செயல்பட்டு  வருகிறது. இந்த அமைப்பு சார்பில் இலக்கியம், ஓவியம், வரலாறு உள்ளிட்ட  பல்வேறு துறைகளில் தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஆளுமைகளை அழைத்து  கலந்துரையாடல் நடத்தப்பட்டு வருகிறது. கலந்துரையாடல்கள்  தொகுக்கப்பட்டு நூலாக்கம் செய்யப்பட்டிருந்தது. இந்த நூல் வெளியீட்டு விழா  காந்தி கலைமன்றத்தில் நடைபெற்றது. கந்தசாமி பாண்டியன் வரவேற்றார். ரமணாலயம்  லோகநாத ராஜா தலைமை வகித்தார்.

சாகித்ய அகாடமி விருதாளர் தேவதாஸ் முன்னிலை  வகித்தார். எழுத்தாளர் நரேந்திரகுமார் தொகுப்புரை வழங்கினார். எழுத்தாளர்  இமயம் நூலை வெளியிட, சாகித்ய அகாடமி விருதாளர் வண்ணதாசன் பெற்று கொண்டார்.  வண்ணநிலவன், யூமா வாசுகி, சங்கர் ராமசுப்பிரமணியன், எழுத்தாளர்  கலாப்பிரியா ஆகியோர் பேசினர். சுதாகர் நன்றி கூறினார். ஏற்பாடுகளை விஜய் அய்யப்பன், பாலசுதர்சன், செந்தில்முருகன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : Book launch ceremony ,
× RELATED நூல் வெளியீட்டு விழா