×

‘கிளீன்’ ஆகிறது வைகை ஆறு கருவேலம் அகற்றும் பணி தொடக்கம் விவசாயிகள் வரவேற்பு

திருப்புவனம், பிப்.26: விவசாயிகளின் கோரிக்கையை அடுத்து திருப்புவனம் வைகை ஆற்றில் கருவேல மரங்கள் அகற்றும் பணி தொடங்கியுள்ளது. திருப்புவனம் வைகை ஆற்றில் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து புதர் மண்டி உள்ளது. இதனால் வைகையில் தண்ணீர் செல்வதில் பெரும் தடை ஏற்படுகிறது. வைகை அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீரை சீமைக்கருவேல மரங்கள் உறிஞ்சி விடுவதால் பயன்பாட்டிற்கு வரும் அளவு குறைந்து விசுகிறது. எனவே வைகை ஆற்றில் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என பூர்வீக வைகைப்பாசன விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர். மாவட்ட நிர்வாகத்தில் உள்ள ஜேசிபி இயந்திரங்களை அனுப்பி சீமைக்கருவேல மரங்களை அகற்ற கலெக்டர் ஜெயகாந்தன் உத்தரவிட்டார்.

இதையடுத்து நேற்று காலை வைகை ஆற்றில் கருவேல மரங்கள் அகற்றும் பணியை மானாமதுரை எம்எல்ஏ நாகராஜன் துவக்கிவைத்தார். மாவட்ட கவுன்சிலர் கருப்பையா, ஒன்றிய செயலாளர் கணேசன், முன்னாள் ஒன்றியக்குழு துணை தலைவர் புவனேந்திரன் மற்றும் அயோத்தி, செல்வராஜ், இலக்கிய அணி நடராஜன், ஒன்றிய விவசாய அணி ஆதிமூலம், பொதுப்பணித் துறை உதவி பொறியாளர் சிங்காரவேலு ஆகியோர் பங்கேற்றனர். பூர்வீக வைகைப்பாசன விவசாயிகள் சங்க பொருளாளர் மணலூர் மலைச்சாமி கூறுகையில், பேரணையிலிருந்து ராமநாதபுரம் வரை சுமார் 370 கண்மாய்களுக்கு தண்ணீர் செல்கிறது.

Tags : start ,removal ,Vaigai river ,
× RELATED அழகர்மலையில் இருந்து வந்த...