×

வருவாய்த்துறை அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்

சிவகங்கை, பிப்.26: சிவகங்கை கலெக்டர் அலுவலகம் மற்றும் தாலுகா அலுவலகங்கள் முன் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆதிதிராவிடர் நல தாசில்தார் அலுவலகத்தை கலைக்கக்கூடாது. கடலூர் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் மீது மாவட்ட கலெக்டர் எடுத்து வரும் ஊழியர் விரோத நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் தமிழரசன் முன்னிலை வகித்தார். வட்ட கிளை செயலாளர் வளன் அரசு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் செல்வக்குமார் மற்றும் பல்வேறு துறைச் சங்கங்களின் தலைவர்கள் பேசினர்.

Tags : Revenue Officers Association ,demonstration ,
× RELATED கால் டாக்சிகள் இயக்குவதற்கு அனுமதி கோரி ஆர்ப்பாட்டம்