×

பழமையான அய்யனார் கோயில் திருவிழா

திருச்சுழி, பிப்.26: நரிக்குடி அருகே பழமை வாய்ந்த அய்யனார் கோயிலில் சிவராத்திரி உற்சவ விழா நடைபெற்றது.நரிக்குடி அருகே உள்ள வீரக்குடியில் அமைந்துள்ள முருகய்யனார் திருக்கோயில் கிழவன் சேதுபதி ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. கடந்த பிப்ரவரி 19ம் தேதி கொடியேற்றத்துடனும், கணபதி ஹோமத்துடனும் உற்சவ விழா தொடங்கியது.

இந்த கோயிலில் தினந்தோறும் காலை, மாலை மற்றும் இரவு ஆகிய மூன்று வேளைகளிலும் முருகய்யனாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. நேற்று கோயிலில் இருந்து முருகய்யனார் சர்வ அலங்காரத்துடன் பூச்சக்கர குடைகள், மகிட தோரணம் சுருட்டி செண்டா, மேள தாளத்துடன் கரகமாடி வீரதிடல் பகுதிக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ சுவாமிக்கு பால் பொங்கலிட்டு மீண்டும் வீரக்குடி கிராமத்தின் முக்கியமான வீதிகளுக்கு ஊர்வலமாக சென்று பக்தர்களுக்கு காட்சியளித்து மீண்டும் மாலை கோயிலுக்கு திரும்பினார். நேற்று அதிகாலையில் அர்த்தசாம பூஜையும் நடைபெற்றது. இக்கோயிலுக்கு விருதுநகர், சிவகங்கை, திண்டுக்கல், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கானோர் வந்து கலந்து கொண்டு முருகய்யனாரை தரிசித்து சென்றனர்.

Tags : Ayyanar ,temple festival ,
× RELATED உடையார்பாளையம் அருகே பழமையான பல்லவர் கால அய்யனார் சிலை கண்டெடுப்பு