×

நலத்திட்ட உதவிகள்

கீழக்கரை. பிப். 26: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு கீழக்கரை இந்து பஜார். மறவர் தெரு. விஏஓ அலுவலகம் அருகில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஜெயலலிதாவின் உருவ படத்தை வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு கீழக்கரை அதிமுக நகர செயலாளர் ஜகுபர் ஹூசைன் தலைமை வகித்தார். மாவட்ட அவைத்தலைவர் முருகேசன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ஜெயஜோதி. கீழக்கரை நகர் அதிமுக பொருளாளர் அரி நாராயணன். இளைஞர் இளம்பெண் பாசறை தலைவர் செல்வ கணேஷபிரபு. மற்றும் நிர்வாகிகள் குமரன். முருகன். சரவண பாலாஜி. நண்டு முனியசாமி. வேலாயுத குமார். மனாசிர். தக்காளி சந்திரன் முன்னாள் மாணவர் அணி செயலாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி அன்னதானம் வழங்கினர்

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை