×

பொங்கலுக்கு வழங்க வேண்டிய இலவச வேஷ்டி, சேலை வழங்கவில்லை என புகார்

கீழக்கரை, பிப். 26: பொங்கலுக்கு வழங்க வேண்டிய இலவச வேட்டி சேலைகள் கீழக்கரையில் ஒரு நியாய விலை கடையை தவிர மற்ற கடைகளில் வழங்கப்படவில்லை என பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர். கீழக்கரையில் மொத்தம் ஒன்பது நியாயவிலை கடைகள் உள்ளன. இந்த கடைகளில் சுமார் 12 ஆயிரம் ரேஷன் கார்டுகள் உள்ளன. இந்த கார்டு தாரர்களுக்கு இலவச வேஷ்டி சேலைகளை அரசு வழங்கி வந்த நிலையில் இந்த வருடம் ஒரு கடையில் மட்டுமே இலவச வேட்டி சேலைகள் வழங்கியுள்ளனர். மீதமுள்ள வேஷ்டி சேலைகள் விஏஓ அலுவலகத்திலேயே வைக்கப்பட்டுள்ளது. இன்னமும் பொதுமக்களுக்கு வழங்கப்படவில்லை.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘வருடம்தோறும் சரியான முறையில் நியாயவிலை கடைகளில் இலவச வேஷ்டி சேலைகள் பொங்கலுக்கு முன்பே வழங்கி விடுவார்கள். இந்த வருடம் பொங்கல் முடிந்து இரண்டு மாதம் முடியும் நிலையில் ஆறாம் நம்பர் நியாயவிலை கடையில் மட்டுமே வேட்டி சேலைகள் வழங்கியுள்ளனர். மற்ற கடைகளில் இன்று வரை வேட்டி சேலை வழங்காதது வருத்தம் அளிக்கிறது.கலெக்டர் இதுகுறித்து விசாரணை செய்து பொதுமக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய வேஷ்டி சேலைகளை உடனடியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.இதுகுறித்து ஒரு நியாயவிலைக் கடை ஊழியரிடம் கேட்டபோது, ‘ இலவசமாக வழங்க வேண்டிய வேஷ்டி சேலைகள் குறைந்த அளவே வந்துள்ளதால் பொதுமக்களுக்கு வழங்க முடியாமல் விஏஓ அலுவலகத்திலேயே வைக்கப்பட்டுள்ளது’ என்றார்.

Tags : Complainant ,Pongal ,prostitute ,
× RELATED அழகு நாச்சியம்மன் கோயில் பொங்கல் விழா