×

தேர்தல் நடந்து ஓரு மாதமாகியும் நிதி ஒதுக்கீடு இல்லாமல் தவிக்கும் ஊராட்சி நிர்வாகம்

அலங்காநல்லூர், பிப்.26: அலங்காநல்லூர் ஒன்றியத்தில் 37 ஊராட்சி தலைவர்கள் மற்றும் 15 ஒன்றிய கவுன்சிலர்களும் உள்ளனர். இந்த ஊராட்சிகளில் கீழச்சின்னனம்பட்டி,தேவசேரி, குட்டி மேய்கிபட்டி, பெரிய இலந்தைகுளம் உள்ளிட்ட பல ஊராட்சிகளில் நிதி கையிறுப்பு பூஜ்ஜியத்தில் உள்ளது. மேலும் பல இடங்களில் தனி அதிகாரிகள் ஊராட்சி மன்ற தலைவர்களிடம் நிர்வாகத்தை ஒப்படைக்கும் போது ஜீரோ பேலன்ஸ் வங்கி கணக்கு புத்தகங்களை கொடுத்துள்ளதாக புதிய ஊராட்சி மன்ற தலைவர்கள் தங்களது முதல் அறிமுக கூட்டத்தில் புகாராக யூனியன் ஆணையாளர்களிடம் வெளிப்படையாக தெரிவித்துள்ளனர்.

உள்ளாட்சி தேர்தல் முடிந்து ஒரு மாதமாகியும் ஊராட்சி நிர்வாகத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்யக் கூட நிதியில்லாத அவல நிலை உள்ளது. இதன் காரணமாக துப்புரவு பணியாளர்களுக்கு சம்பள பாக்கி குடிநீர் குழாய் சீரமைப்பு தெருவிளக்கு பராமரிப்பு போன்ற சிறிய பணிகளுக்கு கூட அரசு நிதி ஒதுக்கீடு செய்யாத காரணத்தினால் உள்ளாட்சி பிரதிநிதி வந்த நிலையிலும் ஊராட்சி நிர்வாகம் ஸ்தம்பித்து உள்ளதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. எனவே கலெக்டர் ஊராட்சி நிர்வாகத்திற்கு அடிப்படை தேவைகளுக்கு உரிய நிதியை விரைந்து ஒதுக்கீடு செய்ய புதிய ஊராட்சி தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : panchayat administration ,election ,
× RELATED அரசு மருத்துவமனைகளில் கொரோனா வார்டு...