×

குஜிலியம்பாறையில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் தேர்வு

குஜிலியம்பாறை, பிப். 26: குஜிலியம்பாறையில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார கிளை தேர்தல் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் துரைராஜ் தலைமை வகிக்க, மாவட்ட தலைவர் ராமசாமி, துணை தலைவர் ராமச்சந்திரன், துணை செயலாளர் பாலமுருகன் முன்னிலை வகித்தனர். தேர்தலில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதில் வட்டார தலைவர் லதா, செயலாளர் பாலமுருகன், பொருளாளர் கண்ணன், துணை தலைவர்கள் வினோத், வளர்மதி, துணை செயலாளர்கள் தண்டாயுதம், சவுடீஸ்வரி, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் காயத்ரிதேவி, கோகிலா, வட்டார செயற்குழு உறுப்பினர்கள் நாகராஜ், ஜோ, பொன்னுச்சாமி, விஜயராகவன், வளர்மதி, பெரியக்காள், சாந்திராணி ஆகியோர் பொறுப்பேற்று கொண்டனர். தேர்தல் ஆணையாளர்களாக வடமதுரை வட்டார செயலாளர் யவணக்கண்ணன், மாவட்ட துணை தலைவர் பெரியசாமி ஆகியோர் செயல்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு குஜிலியம்பாறை வட்டார தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags : Elementary School Teachers Alliance ,
× RELATED சுற்றுலா வாகனங்களை திருப்பி அனுப்பும் போலீசார்