×

ஒட்டன்சத்திரம் அருகே டூவீலர் மெக்கானிக் மர்ம சாவு

ஒட்டன்சத்திரம், பிப். 26: ஒட்டன்சத்திரம் அருகே டூவீலர் மெக்கானிக் மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.ஒட்டன்சத்திரம் அருகே தங்கச்சியம்மாபட்டி காசியப்பகவுண்டன்புதூரை சேர்ந்த பழனிச்சாமி மகன் கருப்பசாமி (28). அப்பகுதியில் டூவீலர் ஒர்க்ஷாப் வைத்து நடத்தி வந்தார். இவர் நேற்று காலை தலையில் பலத்த காயத்துடன் ஒர்க்ஷாப்பில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதை கண்ட அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த அம்பிளிக்கை போலீசார் கருப்பசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : death ,Otanchatram ,mechanic ,
× RELATED கோடை வெயிலால் காய்கறி விளைச்சல்...