×

சோழன் ஏரி தூர்வாரும் பணிக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்

நெய்வேலி, பிப். 26: நெய்வேலியில் சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரன் தலைமையில் அதிகாரிகள், பொதுமக்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. நெய்வேலி  அடுத்த கீழூர் ஊராட்சி பாச்சாரபாளையம் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த புகழ்பெற்ற பாசன சோழன் ஏரியை என்எல்சி நிறுவனம் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணியை கடந்த மாதம் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரன் தலைமையில் துவக்கி வைத்தனர். இந்நிலையில் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகள், விரிவாக்க பணிகள், மதகுகள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து என்எல்சி இந்தியா அதிகாரிகள், பொதுப்பணித்துறை, மின்துறை,  உள்ளாட்சி துறை, ஓஎன்ஜிசி, வருவாய் துறை உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகளுடன் சோழன் ஏரியில் சபா.ராஜேந்திரன் எம்எல்ஏ தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்துகொண்டனர். அப்போது ஏரி தூர்வாரும் பணிக்கு இடையூறுகளாக இருக்கும் மின்கம்பங்கள், ஒஎன்ஜிசி குழாய்கள், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
மேற்கொண்ட அனைத்து கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக எம்எல்ஏ மற்றும் கிராம மக்களிடம் அனைத்து துறை அதிகாரிகள் உறுதி அளித்தனர். இந்நிகழ்வில் கீழூர் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி காசிநாதன், துணை தலைவர் மோகன், வார்டு உறுப்பினர் எழில் அழகன், திமுக நிர்வாகிகள் வெங்கடேசன், ராஜ்குமார், ஐயப்பன், முருகன், கந்தன் உள்ளிட்ட நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.Tags : Chola Lake ,
× RELATED சாலையோர ஆக்கிரமிப்பால் நெரிசலில் சிக்கி தவிக்கும் விக்கிரமங்கலம்