×

திண்டிவனம் அருகே மர்ம இருசக்கர வாகனம்

திண்டிவனம், பிப். 26: திண்டிவனம் அருகே ஒரு வாரத்திற்கும் மேலாக, குதிரை பொம்மையுடன் இருசக்கர வாகனம்  நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.திண்டிவனம் அடுத்த சாரம், ஒலக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே போலீஸ் பூத் அருகே கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக, இருசக்கர வாகனம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.அந்த இருசக்கர வாகனத்தில் குதிரை பொம்மை ஒன்று உள்ளது. தொடர்ந்து அதே இடத்தில் ஒரு வாரத்திற்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் இதனை கண்டு வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர்களும், பொதுமக்களும், அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்தும் இதுநாள் வரை அந்த வாகனத்தை அப்புறப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.மேலும் இந்த வாகனம் எதற்காக வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர். அந்த வாகனம் யாருக்கு சொந்தமானது, எதற்காக இங்கு விட்டுச்சென்றனர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags : Tindivanam ,
× RELATED திண்டிவனம் அருகே தலையில் காயத்துடன்...