×

பாரடைஸ் பீச் உணவக கட்டிடங்களை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது

புதுச்சேரி, பிப். 26: புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிக்
கழக (பிடிடிசி) கேட்டரிங் மற்றும் நீர் விளையாட்டு கூட்டு நடவடிக்கை குழு அவசர செயற்குழு கூட்டம் அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன அலுவலகத்தில் நடந்தது. கூட்டுக்குழு ஒருங்கிணைப்பாளர் விஜயராகவன், துணை ஒருங்கிணைப்பாளர் கெஜபதி, நிர்வாகிகள் நாகராஜன், விஜயராஜ், கருணாமூர்த்தி, முகுந்தன், பாலசுப்ரமணியன், ஆதிமூலம், முத்துசெல்வம், சம்மேளனம் சார்பில் கவுரவ தலைவர் பாலமோகனன், பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன், அமைப்பு செயலாளர் மோகனகிருஷ்ணன், ஆறுமுகம், ஞானசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில், பிடிடிசி நிறுவனத்தில் உள்ள உணவகம், நீர் விளையாட்டு பிரிவு வளாகத்தில் தனியார் அங்காடி கடைகள் வைப்பதற்கு அனுமதி வழங்க கூடாது. சுண்ணாம்பாறு படகு குழாமில் வாகன நிறுத்துமிடத்தை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது. பணியில் இறந்தவர்களின் வாரிசுதாரர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பாரடைஸ் பீச் அருகே சுற்றுலாத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய உணவக கட்டிடங்களை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது. தனியாருக்கு அளித்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்.
பிடிடிசி ஊழியர்களுக்கு 2016 ஜனவரி 1ம் தேதி முதல் 7வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும். பிடிடிசி ஊழியர்களுக்கு டிஏ அலவன்ஸ் இம்மாத ஊதியத்தில் இணைத்து வழங்க வேண்டும். கனகன் ஏரி, ஊசுடு ஏரி, கிருமாம்பாக்கம் ஏரி படகு சவாரிகளை பிடிடிசி நிறுவனத்தின் மூலம் இயக்க வேண்டும். மூடி வைத்துள்ள காரைக்கால் சீகல்ஸ் மது பாரை உடனே திறக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : restaurant buildings ,Paradise Beach ,
× RELATED தனியார் பள்ளிகள் ஆன்லைனில்...