×

உழைப்பாளர் ஓட்டுனர் நலசங்க அலுவலகம் திறப்பு

அரியலூர், பிப்.25: அரியலூர் செந்துறை ரவுண்டானா அருகில், உழைப்பாளர் ஓட்டுனர் நல சங்க அலுவலகம் திறப்பு விழா மாவட்ட தலைவர் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சங்க மாநிலத் தலைவர் சேகர் அலுவலகத்தை திறந்து வைத்து பேசுகையில், ஓட்டுனர்கள் கடின முறையில் வேகமாக செல்வது உடனே பிரேக் அடித்து திருப்புவது, மீண்டும் முழு வேகத்தில் வாகனங்களை இயக்காமல், எளிய முறையில் வாகனங்களை இயக்க வேண்டும், அவ்வாறு வாகனங்களை இயக்கும்போது, விபத்துகள் குறைவதோடு, வாகனத்தேய்மானம் குறையும், டீசல் மிச்சப்படும் என்றார். தொடர்ந்து மாநிலப் பொதுச்செயலாளர் சுரேஷ், மாவட்ட செயலாளர் சதீஸ்குமார் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

இதில் மாவட்ட துணைத்தலைவர்கள் மணிகண்டன், இமான்தம்பி துணை செயலாளர்கள் முருகன், ஆனந்தன் பொருளாளர் வாசுதேவன், துணை பொருளாளார் சந்தோஷ்குமார், ஒருங்கிணைப்பாளர் சங்கர் மற்றும் சரவணன், பஞ்சநாதன், கொளஞ்சி உட்பட ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Opening ,Labor Drivers Welfare Office ,
× RELATED நாளை முதல் கூடுதலாக மதுக்கடைகளை திறக்க டாஸ்மாக் உத்தரவு