குலசேகரன்பட்டினம் தர்ஹா கந்தூரி விழா

உடன்குடி, பிப். 25: குலசேகரன்பட்டினம் குத்துபுல் அமீர் மவுலானா சேரா முஸயார் செய்யது சிராஜூதீன் தர்ஹாவில் கந்தூரி விழா, நாளை (26ம் தேதி) தொடங்கி மார்ச் 12ம் தேதி வரை நடக்கிறது. புதன்கிழமை மாலை 5 மணிக்கு தர்ஹாவில் இருந்து அலங்கரிக்கப்பட்ட யானை மீது கொடிப்பட்டம் பவனியாக கொண்டு வரப்பட்டு இரவு 11 மணிக்கு கொடியேற்றுதல், துஆ ஓதி தப்ரூக் வழங்கப்படுகிறது. மார்ச் 3ம் தேதி திக்ரூ, தப்ரூக் வழங்கப்படும்.

இரவு 11 மணிக்கு அரபிக்கல்லூரி பேராசிரியர் தவ்பிக் அஹமது பிலாயின் மார்க்க சொற்பொழிவு நடக்கிறது. அதிகாலை 1 மணிக்கு சந்தனம் பூசப்பட்டு அதிகாலை 3 மணிக்கு ஹத்தம் தமாம் செய்து ஆபூர்வ துஆ ஓதப்படும். 9ம் தேதி அதிகாலை 2 மணிக்கு தர்ஹாவில் இருந்து சந்தனக்கூடு பவனி, தப்ரூக் வழங்கல் நடக்கிறது. 10ம் தேதி தப்ரூக் வழங்கல், ஹத்தம் தமாம் செய்தல், 11ம் தேதி இரவு 7 மணி முதல் 10 மணி வரை விளக்கு ஏற்றுதல் நடக்கிறது. 12ம் தேதி மாலை 5 மணிக்கு கொடி இறக்கப்பட்டு தப்ரூக் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை ரஹ்மத்துல்லா இமாம் மற்றும் விழாக்குழு நிர்வாகிகள் செய்து வருகின்றனர். 

Related Stories:

>