×

தென்காசி மாவட்ட ஹாக்கி போட்டி சங்கை ஹாக்கி கிளப் அணி முதல்வர் கோப்பையை வென்றது

நெல்லை, பிப். 25: தென்காசி மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டியில் சங்கை ஹாக்கி கிளப் அணி முதல்வர் கோப்பையை வென்றது.
முதலமைச்சர் கோப்பைக்காக தென்காசி மாவட்ட அளவில் 25 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கான ஹாக்கி போட்டி தென்காசி அருகே இலத்தூர் வேல்ஸ் வித்யாலயா மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடந்தது.

இதில் மகளிர் பிரிவுக்கான போட்டியில் பங்கேற்று அபாரமாக ஆடிய செவல்குளம் அரசு உயர் நிலைப் பள்ளி சங்கை கிளப் அணியினர் இறுதிப் போட்டியில் குற்றாலம் பராசக்தி கல்லூரி அணியை வென்று முதலிடம் பிடித்தனர். இதையடுத்து வெற்றிபெற்ற வீராங்கனைகளுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜேஷ் மற்றும் ஹாக்கி பயிற்றுநர் அமர்நாத் உள்ளிட்டோர் முதல்வர் கோப்பையை பரிசாக வழங்கியதோடு சான்றிதழ் அளித்தனர். சாதனை படைத்த அணியினரையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் முருகேசன் மற்றும் நந்தகுமார்,செல்வக்குமார் உள்ளிட்டோரை ஆசிரியர்கள், அலுவலர்கள், சக மாணவ, மாணவிகள், பெற்றோர், ஊர் பொதுமக்கள் பாராட்டினர்.

Tags : Tenkasi District Hockey ,Tournament ,
× RELATED சில்லி பாயின்ட்…