மாற்றுத்திறனாளிகள் கலெக்டரிடம் மனு

கோவை, பிப். 25:  கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் ராஜாமணி தலைமை வகித்தார். இதில், மாற்றுத்திறனாளிகள் இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி கோவை மாவட்ட மகளிர் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் தலைவர் ஹேமா தலைமையில் மாற்றுத்திறனாளிகள் மனு அளித்தனர். மனுவில், கோவை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை வேண்டும். குறிப்பாக, மாற்றுத்திறனாளி பெண்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

Related Stories:

>