×

மூதாட்டி கொலை வழக்கு வாலிபருக்கு 7 ஆண்டு சிறை

கோவை, பிப்.25:  மூதாட்டி கொலை வழக்கில் வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோைவ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகேயுள்ள அம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி சுப்பம்மாள் (61). கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் 12ம் தேதி சுப்பம்மாள் அதே பகுதியில் ஆடு மேய்த்து கொண்டிருந்தார். லோடு மேனாக பணியாற்றி வரும் மணிகண்டன் (30) என்பவரின் வீட்டு வழியாக அவர் சென்றுள்ளார்.

அப்போது சுப்பம்மாளிடம் மணிகண்டன் வாக்குவாதம் செய்து தகாத முறையில் பேசி கல்லால் கடுமையாக தாக்கிவிட்டு தப்பியோடினார். இதில் காயம் அடைந்த சுப்பம்மாள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி இறந்தார். இது தொடர்பாக பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். இந்த வழக்கு கோவை 5வது அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. நேற்று குற்றம் சாட்டப்பட்ட மணிகண்டனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி முகமது பாரூக் தீர்ப்பளித்தார்.

Tags : murder ,
× RELATED ஏரியில் மூழ்கி வாலிபர் பலி