×

சென்னம்பட்டியில் இன்று மின் நிறுத்தம்

ஈரோடு, பிப். 25:   ஈரோடு மாவட்டம் பவானி சென்னம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (25ம் தேதி) நடக்கிறது. இதனால், கண்ணாமூச்சி, கொமராயனூர், தொட்டிக்கிணறு, கிட்டம்பட்டி, முரளிபுதூர், வெள்ளக்கரட்டூர், சனிச்சந்தை, விராலிக்காட்டூர், ஆழமரத்தோட்டம், பொரலிபாளையம், குரும்பபாளையம், தண்ணீர்பந்தல்பாளையம், ஜி.ஜி. நகர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இத்தகவலை கோபி மின் விநியோக செயற்பொறியாளர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

Tags : Power shutdown ,Chennai ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...