×

வாழ்வுரிமை கட்சியினர் கலெக்டரிடம் கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள வனக்காடுகளில் இந்த மண்ணுக்கே உரிய அரிதான பாலை மரங்கள், உசிலை, காஞ்சிரான், நெய்கோட்டான் மரங்களும், சங்கு இலை, நொச்சி இலை, ஆடு தின்னா பாலை, பெருமருந்து போன்ற அரிய மூலிகைகளும் காணப்படுகின்றன. பெரும்பாலானவை வருவாய்த் துறையினரின் கட்டுப்பாட்டில் “கோயில் காடுகள்’ என்ற பெயரிலேயே உள்ளன.புதுக்கோட்டை, பிப்.25: திருமலைராயசமுத்திரம் ஊராட்சி செயலாளரை தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும்.அவர்மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை என மக்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். கூட்டத்தில் திருமலைராய சமுத்திரம் சிறுவாய்ப்பட்டி ஊர்பொதுமக்கள் கொடுத்த மனுவில், பானுமதி என்பவர் கடந்த 13 ஆண்டுகளாக திருமலைராய சமுத்திரம் ஊராட்சியில் ஊராட்சி செயலாளராக பணியாற்றி வருகிறார். அவர் எங்களுக்கு தேவையான குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி மற்றும் 100 நாள் வேலை திட்டம் போன்ற அனைத்திற்கும் எந்த குறைகளும் இல்லாமல் பணியாற்றி வருகிறார். அவர்மீது சொல்லப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளும் உண்மைக்கு புறம்பானவை. எனவே எங்களது ஊராட்சி செயலாளர் பானுமதியை தொடர்ந்து எங்களது ஊராட்சியிலேயே பணியாற்ற வழிவகை செய்ய வேண்டும் எனக் கூறியிருந்தனர்.

Tags : Collector ,
× RELATED குடிநீர் பிரச்னைகளுக்கு...