×

பழநி பாலாஜி கருத்தரித்தல் மையத்தில் மருத்துவ விழிப்புணர்வு முகாம்கள்

பழநி, பிப். 25: பழநி டிஎஸ் மருத்துவமனை வளாகத்தில் செயல்படும் பாலாஜி கருத்தரித்தல் மையம் பழநி, மதுரை, சென்னை ஆகிய இடங்களில் இயங்கி வருகிறது. இங்கு கருத்தரித்தல், மகளிர் நலம் தொடர்பான சிகிச்சைகள் அதிநவீன முறையில் குறைந்த கட்டணத்தில் வழங்கப்படுகிறது. இம்மையத்தில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிரின் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணும் வகையில் பிப்ரவரி 23ம் தேதி துவங்கி மார்ச் மாதம் வரை ஒவ்வொரு ஞாயிற்று கிழமைகளில் சிறப்பு மகளிர் மருத்துவ விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படுகின்றன.

கடந்த 2 நாட்களாக மகளிர் எலும்பின் வலு அறியும் பரிசோதனை, உடல் கொழுப்பின் அளவினை அறியும் பரிசோதனை இலவசமாக நடத்தப்பட்டது. பாலாஜி கருத்தரித்தல் மையத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர்.செந்தாமரைசெல்வி தலைமையிலான மருத்துவ குழுவினர் பரிசோதனைகளை மேற்கொண்டனர். இதனடிப்படையில் பெண்களின் முக்கிய பிரச்னைகளில் ஒன்றான எலும்பு தேய்மானம் கண்டறியப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதுபோல் உடல் பருமனுக்கு காரணமாகும் அதிகப்படியான உடல் கொழுப்பு கண்டறியப்பட்டு, அதற்கான சிகிச்சை குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதில் 200க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றனர்.

இதுபோல் வரும் மார்ச் முழுவதும் 1, 8, 15, 22, 28 ஆகிய தேதிகளில் முறையே பெண்களின் உடல் பிரச்னைகள் தொடர்பான மகளிர் நலம், மகப்பேறு சிகிச்சை, மாதவிடாய், மெனோபாஸ்- மகளிருக்கான லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை முகாம் இலவசமாக நடைபெறுகிறது. ஸ்கேன் பரிசோதனை முற்றிலும் இலவசமாக செய்யப்படுகிறது. பரிசோதனை, சிகிச்சை தொடர்பான ஆலோசனைகள் இலவசமாக வழங்கப்படுகிறது. பெண்கள் இம்முகாம்களில் பங்கேற்று பயனடைய வேண்டுமென நிர்வாக இயக்குநர் டாக்டர்.செந்தாமரைசெல்வி தெரிவித்துள்ளார்.

Tags : Medical Awareness Camps ,Palani Balaji Fertility Center ,
× RELATED சுற்றுலா வாகனங்களை திருப்பி அனுப்பும் போலீசார்