×

உயிரோடு விளையாடும் வியாபாரிகள் தரமில்லாத தலைக்கவசம் விற்பனையா...? தொழிலாளர் துறையில் புகார் செய்யலாம்

மதுரை, பிப்.25: தமிழகத்தில் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணிவது கடந்த 2015ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஹெல்மெட் அணிவது கட்டாயம் என சட்டமாக்கப்பட்டது. இதனால் தமிழகம் முழுவதும் ஹெல்மெட் அதிகளவில் விற்பனை ஆனது.மதுரையில் பிரபல ஷோரூம்கள் முதல், சாலை ஓரம் வரை ெஹல்மெட்டுகள் விற்கப்பட்டன. ஹெல்மெட்டுகள் கிடைக்காத நிலை உருவானது. இதனை பயன்படுத்திக்கொண்ட ஹெல்மெட் வியாபாரிகளில் பலர், தரமில்லாத ஹெல்மெட்டுகளையும், ஐஎஸ்ஐ. முத்திரை பதித்த ஹெல்மெட்டுகளின், உண்மை விலையை மறைத்து ரூ.200 முதல் ரூ.500 வரை கூடுதலாக வைத்தும் விற்றனர். இதனால் தரமற்ற ஹெல்மெட்டுகள் அதிகளவில் புழக்கத்தில் வந்தன.இதுகுறித்து பல்வேறு தரப்பினர் புகார் தெரிவித்ததால், ெதாழிலாளர் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.\

இந்நிலையில், தற்போது தரமில்லாத மற்றும் ஐஎஸ்ஐ. முத்திரையை போலியாக பதிவு செய்த ஹெல்மெட்டுகளும் விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. சமூக ஆர்வலர் சந்திரசேகரன் கூறுகையில், ``தரமில்லாத ஹெல்மெட்டுகள் குறித்து வந்த புகாரின் பேரில், தொழிலாளர் துறையினர், மதுரையில் ஹெல்மெட் விற்பனை கடைகளில் சோதனை நடத்தி, தரம் குறைந்த ஹெல்மெட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும், ஹெல்மெட்டுகளை எம்ஆர்பி. விலையைவிட அதிக விலைக்கு விற்ற கடைக்காரர்களிடம் விளக்கம் கேட்டனர். ஆனால் அந்த நடவடிக்கை தொடராததால், ஹெல்மெட் விற்பனையில் மோசடி தற்போதும் தொடர்கிறது. எனவே ஹெல்மெட் விற்கும் இடம், ஷோரூமாக இருந்தாலும், சாலையோரமாக இருந்தாலும் தொழிலாளர் துறை அதிகாரிகள் சோதனை நடத்த வேண்டும். மோசடி செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தரமில்லாத மற்றும் போலி ஐஎஸ்ஐ முத்திரை பதித்த ஹெல்மெட்டுகள் விற்பனை செய்வது தெரியவந்தால், உயிரோடு விளையாடும் வியாபாரிகள் குறித்து, எல்லீஸ் நகர், வீட்டு வசதி வாரிய முதல்தளத்தில் அமைந்துள்ள மதுரை தொழிலாளர் ஆய்வாளர் அலுவலகத்தில் புகார் ெசய்யலாம்’’ என்றார்.

Tags : merchants ,Labor ,
× RELATED பறக்கும் படை கெடுபிடியால் மக்கள்...