×

பெண் குழந்தைகளின் பாதுகாப்பை வலியுறுத்தி மாணவிகள் பங்கேற்ற மனிதசங்கிலி

ராமநாதபுரம், பிப்.25:  ராமநாதபுரம் அருகே சாத்தான்குளம், அரசு மேல்நிலை பள்ளியில் மாநில பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, பெண் குழந்தைகளின் பாதுகாப்பை வலியுறுத்தி மாணவிகள் அனைவரும் மனித சங்கிலி ஏற்படுத்தினர். பள்ளி தலைமை ஆசிரியர் செல்வராஜ் மனித சங்கிலியை தலைமை ஏற்று தொடக்கி வைத்தார். மாணவர்கள் சாத்தான்குளம் ஊராட்சி சாலையில் மனித சங்கிலி ஏற்படுத்தினர். மனித சங்கிலி நிகழ்வில் ஆசிரியர்கள் சாம்ராஜ், கதிர்மணி, வத்சலா தேவி, புனித ராணி, யமுனா, சுமதி மற்றும் உடற்கல்வி கணிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர். மாணவ,மாணவிகள் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து உறுதிமொழி எடுத்தனர்.

அடுத்து நடந்த பரிசளிப்பு விழாவிற்கு உதவி தலைமை ஆசிரியர் சுவாமிதாஸ் தலைமை வகித்தார். ஆசிரியர் சாந்தி வரவேற்றார். ஆசிரியர் திருமூர்த்தி பெண் குழந்தைகள் பாதுகாப்பின் அவசியம் குறித்து பேசினார். மேலும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் உரிமைகள் உடன்படிக்கையில் வழங்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான உரிமைகள் குறித்து ஆசிரியர் ஜெரோம் விளக்கினார். மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு, “பெண் குழந்தைகள் பாதுகாப்பு” தலைப்பில் கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Tags : human chain ,girl child ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலில் 100% வாக்குப்பதிவை...