×

இளையான்குடி அருகே மாசி களரி மஞ்சுவிரட்டு ஏராளமானோர் கண்டுரசிப்பு

இளையான்குடி, பிப். 25: இளையான்குடி அருகே விஸ்வநாதபுரத்தில் நடந்த மாசி களரி திருவிழா மஞ்சுவிரட்டை ஏராளமானோர் கண்டுரசித்தனர். இளையான்குடி அருகே வல்லக்குளம் ஊராட்சி, விஸ்வநாதபுரத்தில் உள்ளது அருள்மிகு தர்மமுனியய்யா கோயில். இங்கு ஆண்டுதோறும் மாசி களரி திருவிழாவையொட்டி மஞ்சுவிரட்டு நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு மாசி களரி மஞ்சுவிரட்டு திருவிழா நேற்று வெகு விமரிசையாக நடந்தது. முன்னதாக கிராமமக்கள் சார்பில் தர்ம முனியய்யாவிற்கு பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர் நடந்த மஞ்சுவிரட்டில் பல்வேறு ஊர்களை சேர்ந்த 60 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதனை ஏராளமானோர் கண்டுரசித்தனர். தொடர்ந்து இரவு கலைநிகழ்ச்சிகள் நடந்தன. இளையான்குடி இன்ஸ்பெக்டர் பழனிமுத்து தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags : Iliyagudi ,
× RELATED கீரை விவசாயத்தில் லாபம் அள்ளலாம் கேவிகே தலைவர் தகவல்