×

ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அதிமுகவினர் அன்னதானம்

தேனி, பிப். 25: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவை நேற்று தேனியில் அதிமுகவினர் கொண்டாடினர். நகர அதிமுக ஜெயலலிதா பேரவை சார்பில், தேனி நகர் நேரு சிலை மற்றும் அல்லிநகரத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பிரியாணி பொட்டலங்கள் வழங்கப்பட்டது. விழாவிற்கு தேனி நகர அதிமுக செயலாளர் வக்கீல்.கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். ஜெயலலிதா பேரவை செயலாளர் சுந்தரபாண்டியன் முன்னிலை வகித்தார். இதனை மாவட்ட செயலாளர் சையதுகான் துவக்கி வைத்தார். இதில் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் முருகேசன், நகர தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் ஜெயபிரகாஷ், முன்னாள் கவுன்சிலர் ஆப்பிள்முருகன், ஜெயக்குமார், மயில்வேல் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விழாவினையொட்டி நகரில் அனைத்து வார்டுகளிலும் அதிமுக கொடியேற்றப்பட்டது.தேனி அருகே வடபுதுப்பட்டியில் பெரியகுளம் ஒன்றிய அதிமுக செயலாளர் அன்னப்பிரகாஷ் தலைமையில் விழா கொண்டாடப்பட்டது. விழாவினையொட்டி மனநலம் குன்றியோர் விடுதியில் தங்கியுள்ள 100 பேருக்கு அன்னதானம் மற்றும் உடைகள் வழங்கப்பட்டது. விழாவில், ஒன்றிய கவுன்சிலர் ஆண்டி, மாவட்ட கவுன்சிலர் ஈஸ்வரி, அதிமுக ஊராட்சி செயலாளர் முருகன், கிளை செயலாளர் ஜெயராஜ், அம்மாபுரம் பொற்செழியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Birthday ,Jayalalithaa ,
× RELATED வேட்பாளர்களை ஆதரித்து தமிழகத்தில்...