×

என்எல்சி ெதாழிலாளர்களின் பிரச்னையை பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்க வேண்டும்

கடலூர், பிப். 25: கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் எம்எல்ஏ விடுத்துள்ள அறிக்கை: என்எல்சி நிர்வாகம் ஒப்பந்தம் மற்றும் இன்கோசர்வ் தொழிலாளர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும். என்எல்சி நிறுவனத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக நிலம், வீடு கொடுத்தோர், வாரிசுகள் மற்றும் சுற்றுப்புற கிராமத்தை சேர்ந்தவர்கள் ஒப்பந்தம் மற்றும் இன்கோசர்வ் தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். கடந்த ஊதிய மற்றும் ஒப்பந்த காலம் நிறைவடைய உள்ள நிலையில், ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும், அவர்களின் நியாயமான கோரிக்கைகளை என்எல்சி நிர்வாகம் ஏற்றுக்கொள்ளாத நிலையில், தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் செய்ய உள்ளனர்.

 இதனால், வரும் கோடை காலங்களில் தென் மாநிலங்கள் பாதிப்பதோடு, அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கீழ்கண்ட கோரிக்கைகளை பேச்சுவார்த்தையின் மூலம் நிறைவேற்றி வேலை நிறுத்தத்திற்கு தீர்வு காண வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரையும் இன்கோசர்வ் தொழிலாளர்களாக மாற்ற வேண்டும். ஐந்தாண்டுக்கு ஒரு பதவி உயர்வு வழங்க வேண்டும். இத்துடன் தொழிற்சங்கங்கள் வைத்துள்ள இதர கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு காண நிர்வாகம் முன் வரவேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Tags : negotiation ,NLC ,
× RELATED விபத்தில் என்எல்சி தனி அலுவலர் இறப்பு;...