×

சேத்தியாத்தோப்பில் 25 கண்மாய் பாலத்தில் தேங்கியுள்ள மண்குவியலை அகற்ற வேண்டும்

சேத்தியாத்தோப்பு, பிப். 25: சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோடு 25 கண்மாய் பாலத்தில் தேங்கியுள்ள மண்குவியலை விரைந்து அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பேரூராட்சிக்குட்பட்டதும், சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் பாலமான 25 கண்மாய் பாலம் சுமார் இரண்டு நூற்றாண்டுகளை கடந்த பாலமாகும். மிகவும் குறுகலான இந்தப்பாலம் மயிலாடுதுறை, காரைக்கால் , தஞ்சாவூர், புதுக்கோட்டை, சேலம், திருச்சி ஆகிய பெருநகரங்களை இணைக்கும் பிரதான பாலமாகும்.இந்த பாலத்தின் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான பேருந்துகளும், பள்ளி, கல்லூரி வாகனங்களும், கனரக வாகனங்களும், இரு சக்கர வாகனங்களும் சென்று வருகின்றன.

இது தவிர 40க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து டிராக்டர்களில் கரும்பு ஏற்றி கொண்டு கிராமங்களிலிருந்து டிராக்டர்களில் கரும்பு ஏற்றி கொண்டு இந்த பாலத்தை கடந்து தான் மிக அருகில் உள்ள எம்ஆர்கே கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு விவசாயிகள் கொண்டு செல்கின்றனர். இந்நிலையில் பாலத்தில் பேருந்துகள், டிராக்டர்கள் வரும் போது இரு சக்கர வாகனங்கள், சைக்கிளில் செல்பவர்கள் பாலத்தில் குவிந்துள்ள மண் குவியலில் மாட்டிகொண்டு இடிபாடுகளில் சிக்கி விபத்தில் தொடர்ந்து சிக்கி வருகின்றனர். எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரடியாக பாலத்தில் குவிந்துள்ள மண் குவியலை பார்வையிட்டு அகற்ற வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Removal ,earthquake ,eye bridges ,
× RELATED உத்தரகாண்டில் லேசான நிலநடுக்கம்