×

வாலிபர் கொலையில் மேலும் 2 பேர் கைது

சென்னை, பிப்.25: சென்னை அமைந்தகரையில் நடந்த வாலிபர் கொலை வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.சென்னை  அமைந்தகரை ஷெனாய் நகரை சேர்ந்த பிரவீன்குமார் (21), கடந்த 14ம் தேதி இரவு தனது நண்பர் விக்கி என்பவருடன், மதுரவாயல் விடுதியில் வசிக்கும் மற்றொரு நண்பர் மோகன் என்பவரை பார்க்க சென்றார். அங்கு மோகனை  பார்ப்பதற்கு விக்கி முதல் மாடிக்கு சென்றார். கீழே நின்றுகொண்டிருந்த பிரவீன்குமாரை, பைக் திருட வந்தவர் என கருதிய 8 பேர் கும்பல் சரமாரி தாக்கினர். இதில், பிரவீன்குமார் இறந்தார்.

போலீசார் வழக்கு பதிந்து, அதே பகுதியை சேர்ந்த ஜெயசீலன் (25), சார்லஸ் (25), சாமுவேல் (18) மற்றும் 3 சிறுவர்கள் என 6 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த நொளம்பூரை சேர்ந்த நிதிஷ் பாபு (34), செங்கல்பட்டை  சேர்ந்த முஜிபூர் ரகுமான் (25) ஆகியோரை நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED தொடர் கொள்ளை; 2 பேர் கைது