×

சிவராத்திரியை முன்னிட்டு கேந்தி பூக்கள் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி

திருவில்லிபுத்தூர், பிப். 21:  சிவராத்திரியை முன்னிட்டு திருவில்லிபுத்தூர் பகுதியில் மாலைகளில் அதிகளவு பயன்படுத்தப்படும் கேந்தி பூக்கள் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் சிவராத்திரியை முன்னிட்டு தங்களது குலதெய்வங்களை வழிபட அனைவரும் தயாராகி வருகின்றனர். குல தெய்வங்களுக்கு அணிவிக்கப்படும் மலர் மாலைகளில் பெரும்பான்மையாக கேந்தி பூக்கள் பயன்படுத்தப்படுகிறது.

இந்த கேந்தி பூக்களின் விலை தற்போது உயர்ந்துள்ளது. பொதுவாக திருவிழா இல்லாத நேரங்களில் கேந்திப்பூக்கள் கிலோ ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனையாகும். தற்போது சிவராத்திரி உட்பட முக்கிய திருவிழாக்கள் வருவதால் ஒரு கிலோ கேந்தி பூ தரத்திற்கேற்ப ரூ.40 முதல் சுமார் ரூ.50 வரை விற்பனை செய்யப்படுகிறது. திருவில்லிபுத்தூர் பூ மார்க்கெட்டுக்கு கேந்தி பூக்கள் மேல தொட்டியபட்டி, பிள்ளையார்நத்தம், பூவாணி ஆகிய பகுதிகளில் இருந்து விவசாயிகள் அதிகளவில் கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம். தற்போது கேந்திபூக்கள் பயன்பாடு அதிகரிப்பதால்விலையும் உயர்ந்துள்ளது. இதனால் இந்த பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : hike ,Gandhi ,Shivaratri ,
× RELATED சொல்லிட்டாங்க…