×

விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று நடக்கிறது

தேனி, பிப். 21: தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று (21ம் தேதி) காலை 10 மணியளவில், மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடக்க உள்ளது. இக்கூட்டத்திற்கு கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை வகிக்கிறார். இக்கூட்டத்தில் மாவட்ட அளவிலான பல்வேறு அரசுத்துறை உயரதிகாரிகள் கலந்து கொண்டு விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு தீர்வு அளிக்க உள்ளனர். எனவே இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED மயிலாடும்பாறை காளியம்மன் கோயில் பங்குனி திருவிழா