×

உடைந்து நாசமான சோலார் மின் தகடு

உத்திரமேரூர், பிப்.21: உத்திரமேரூர் அருகே திருவாணைக்கோவில் கிராமத்தில், சோலார் மின்தகடு உரிய பராமரிப்பு இல்லாமல், உடைந்து நாசமானது.
உத்திரமேரூர் அடுத்த திருவாணைக்கோவில் கிராமத்தில் 800க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த கிராமத்தின் முக்கிய சாலைகளில் கடந்த ஆண்டு சோலார் சாதனங்கள் மற்றும் அதன் உதவியோடு எரியக்கூடிய சாலையோர மின் விளக்குகள் அமைக்கப்பட்டன. ஆனால், இந்த தெரு விளக்குகள் மற்றும் சோலார் மின் தகடுகளை ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்கவில்லை.

இதையொட்டி புதிதாக அமைக்கப்பட்ட சோலார் சாதனங்கள் மற்றும் சாலையோர மின் விளக்குகள் சிதிலமடைந்து எரியாமல் உள்ளன. இதனால் திருவாணைக்கோவில் கிராமத்தில் கடந்த 6 மாதங்களாக விளக்குகள் எரியாததால், தெருக்கள் இருளில் மூழ்கி காணப்படுகிறது. இதில், இரவு நேரங்களில் விஷப்பூச்சிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளதால், கிராம மக்கள் உயிர் பயத்துடனே வசிக்கின்றனர். மேலும் இரவு நேரங்களில் திருடர்கள் பயத்தினாலும் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே ஊராட்சி நிர்வாகம், பழுதடைந்துள்ள சோலார் சாதனங்கள் மற்றும் சாலையோர மின் விளக்குகளை சீரமைத்து, இருளில் மூழ்கியுள்ள சாலைகளில் வெளிச்சத்தை ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags :
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...