×

பொன்விளைந்த களத்தூரில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம்

செங்கல்பட்டு: பிப்.21: பொன்விளைந்த களத்தூரில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம், 24 மணி நேரம் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையம், பால் குளிரூட்டும் நிலையம் அமைக்க வேண்டும் என பாமக இளைஞர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. செங்கல்பட்டு அடுத்த ஒத்திவாக்கம் பகுதியில் பாமக இளைஞர் சங்க மாநாடு நடந்தது. மாநில இளைஞர் சங்க துணை செயலாளர்  சக்கரபாணி தலைமை வகித்தார். நிர்வாகிகள் ஜானகிராமன், அர்ஜுனன், கோட்டி, தமிழரசு, ரமேஷ், கோ.தமிழரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய இளைஞர் சங்க தலைவர் ஒ.இ.சதீஷ்குமார் வரவேற்றார். மாநில துணை பொதுச் செயலாளர் திருக்கச்சூர் ஆறுமுகம், மாவட்ட செயலாளர் காரணை ராதாகிருஷ்ணன், மாவட்ட துணை செயலாளர்கள் கே.நைனியப்பன், ஆ.நடராஜன் ஆகியோர்   கலந்து கொண்டனர்.

மாநாட்டில் பொன்விளைந்த களத்தூர் பகுதியில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும், 30 படுக்கை வசதிகளுடன் 24 மணிநேரமும் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். கால்நடைகளை பாதுகாக்கும் வண்ணம் பால் குளிரூட்டும் நிலையம் அமைக்க வேண்டும். பொன்விளைந்த களத்தூர் - திருக்கழுக்குன்றம் இணைப்பு சாலையை அகலப்படுத்த வேண்டும். 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்ததற்கும், காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததற்கு நன்றி தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து, மாநாட்டில் மது ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிர்வாகிகள் கே ராஜேஷ், கே கார்த்தி,  கமல் தினகரன், தேவராஜ், மோகன் உள்பட பலர் பங்கேற்றனர். முடிவில் ஊராட்சி  செயலாளர் ராஜேஷ் நன்றி கூறினார்.

Tags : Permanent ,Paddy Purchasing Station ,
× RELATED ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியாக திருமூர்த்தி நியமனம்