×

கார் மோதிய விபத்தில் பள்ளி மாணவன் பலி

காடையாம்பட்டி, பிப்.21: காடையாம்பட்டி அருகே பூசாரிப்பட்டி ஊராட்சி சவுதாயக்காடு பகுதியை சேர்ந்தவர் அறிமுகம் மகன் விஜயகுமார்(13). இவர் பண்ணப்பட்டி அரசினர் மேல் நிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை, பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக, பண்ணப்பட்டி பிரிவு வழியாக பூசாரிப்பட்டி செல்வதற்காக விஜயகுமார் சென்று கொண்டிருந்தார். சேலம் - தர்மபுரி பண்ணப்பட்டி பஸ் ஸ்டாப் அருகில் நின்று கொண்டிருந்த போது, சேலம் நோக்கி வந்த கார், விஜயகுமார் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த விஜயகுமாரை பொதுமக்கள் மீட்டு, ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், விஜயகுமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : School student ,car accident ,
× RELATED மணப்பாறை அருகே 9 வயது சிறுமியை கொலை செய்ததாக பள்ளி மாணவர் கைது