×

ஒருமுறை குடிநீர் சப்ளை பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கரூர், பிப். 21: கரூர் நகராட்சி பகுதியில் வாரம் ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.கரூர் நகராட்சிக்குட்பட்ட குடியிருப்பு பகுதிகளுக்கு வாங்கல், நெரூர், கட்டளை ஆகிய காவிரி ஆற்றுப்பகுதிகளில் இருந்து நீரேற்று நிலையங்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.கடந்த சில மாதங்களாகவே 10 முதல் 15 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் சரிவர தண்ணீர் கிடைக்காமல் மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, சீரான முறையில் தண்ணீர் வழங்ககோரி நகராட்சி பகுதியில் பலமுறை முற்றுகை போராட்டங்கள் நடைபெற்றன. தற்போதும் விரைவில் கோடை காலம் துவங்கவுள்ளது. எனவே இனி வரும் காலங்களில் வாரம் ஒரு முறை சுகாதாரமான முறையில் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து பார்வையிட்டு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags :
× RELATED ஆத்ம நேச ஆஞ்சநேயர் கோயிலில் ராம நவமி விழா